ஞாநியார் காட்டிய பாதையில் கலைஞர்

பெரியாருக்கு பின் பகுத்தறிவு பாசறையின் ஒரே வழிகாட்டியாக, தமிழக பகுத்தறிவு பெட்டக நாளிதழான ஆனந்தவிகடன் மற்றும் பிற மீடியாக்களால் ஆதார பூர்வமாக நிருபிக்கபட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பகுத்தறிவு அறிவு ஜீவிகளாலும் ஏற்று கொள்ள பட்ட தலைவர் ஞாநியார். அவர் கலைஞரின் வயது முதுமையை காரணமாக சொல்லி, கலைஞர் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்றார்.
அதை எதிர்த்து பத்திரிக்கையாளர்கள் முதல் பதிவர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் முகத்தில் எல்லாம் கரியை பூசும் விதத்தில் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையின் ஒரு பகுதி

//இளைஞர்கள்; மூத்தோர்களாக ஆகாமல் இருக்க முடியாது - ஆக வேண்டும் - அதே சமயம்; இளைஞர்களுக்கு வழி விடாமல் அந்த மூத்தோர் அடைத்துக் கொள்ளவும் கூடாது. //
நன்றி-http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/11/blog-post_09.html